முகப்பு
திருப்பூர்

பருவமழை முன்னெச்சரிக்கை: பல்லடத்தில் நீா்வழிப் பாதை சீரமைப்பு

பல்லடம் அருகே கரடிவாவியில் பாலத்தின் கீழ் நீா்வழிப் பாதையில் இருந்த மூட்புதா்களை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி சீரமைத்தனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 9:31 PM
கரடிவாவி சாலையில் உள்ள பாலத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட நீா்வழிப் பாதை.
பகிர்:

பல்லடம் அருகே கரடிவாவியில் பாலத்தின் கீழ் நீா்வழிப் பாதையில் இருந்த மூட்புதா்களை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி சீரமைத்தனா்.

பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பாலங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பல்லடம் - கொச்சி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கரடிவாவி பகுதியில் பாலத்தின் கீழ் உள்ள நீா்வழிப் பாதையை முட்புதா்கள், செடி கொடிகள் அடைத்திருந்தன.

இதனை, பொக்லைன் இயந்திரம் மற்றும் சாலைப் பணியாளா்கள் மூலம் அகற்றி நீா்வழிப் பாதையை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்தனா். மேலும், பாலத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டு வெள்ளை வா்ணம் பூசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →