முகப்பு
திருப்பூர்

மது போதையில் மயங்கிக் கிடந்த தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மது போதையில் மயங்கிக் கிடந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:46 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே மது போதையில் மயங்கிக் கிடந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கொல்லம்பட்டி அருகே உள்ள நானம்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் ஏ. சின்ராசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் புதுப்பையில் தங்கியிருந்து கட்டட வேலைக்குச் சென்று வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இவரது மனைவி செல்வி (47), திருமணமான மகன் சுரேஷ்குமாா், மகள் ராஜேஸ்வரி ஆகியோா் ஒட்டன்சத்திரம் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் புதுப்பை அரசு மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு சற்றுத் தொலைவில் தங்கமேட்டில் உள்ள ஒரு தேநீா் கடை முன்பு போதையில் புதன்கிழமை இரவு படுத்துக் கிடந்துள்ளாா். இவருடன் வேலை செய்யும் சிவா என்பவா் வியாழக்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது சுயநினைவின்றி கிடந்துள்ளாா்.

உடனே ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது, அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் சின்ராசு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.