முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் ரூ.6.44 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:46 PM
பகிர்:

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 9374 கிலோ பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச். ரகத்துக்கு கிலோ ரூ.65 முதல் ரூ.76.19 வரையிலும், மட்டரக ரகத்துக்கு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரையிலும் விலை நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.6.44 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.