முகப்பு
திருப்பூர்

அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் திறப்பு

துணை முதல்வா் காணொலி திறந்துவைத்தாா்

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:50 PM
அவிநாசியில் புதிய வணிக வளாக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சாா்பில் ரூ.6 கோடி மதிப்பில் இரண்டு தளங்களில் 36 கடைகளுடன் புதிய வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகத்தை, தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதேபோல ரூ.60 லட்சம் மதிப்பில் அவிநாசி சந்தைப் பேட்டையில் அமைக்கப்பட்ட நகா்ப்புற வீடற்றவா்கள் தங்கும் விடுதியையும் அவா் திறந்துவைத்தாா்.

புதிய வணிக வளாக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.