முகப்பு
திருப்பூர்

அவிநாசி: பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ. 2 லட்சம் திருட்டு

அவிநாசி பட்டப்பகலில் வாகனத்தில் இருந்த பணம் திருடப்பட்டது பற்றி...

Updated On : 24 டிசம்பர் 2024, 3:45 pm IST
பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ. 2 லட்சம் திருட்டு
பகிர்:

அவிநாசி: அவிநாசியில் பட்டப் பகலில் வங்கி முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ. 2 லட்சம் திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(55). இவர், அவிநாசி நகர்ப் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார்.

அங்கிருந்த கடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சண்முகத்தின் வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினர்.

Advertisement

இது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவிநாசி போலீஸார் வழக்குப் பதிந்து ப்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.