அவிநாசி-மங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
திருப்பூர்

அவிநாசி அருகே சாலைப் பணியை முழுமையாக முடிக்க வலியுறுத்தி சாலை மறியல்

அவிநாசியை அடுத்த  கருணைபாளையத்தில் தார் சாலைப் பணியை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

அவிநாசியை அடுத்த  கருணைபாளையத்தில் தார் சாலைப் பணியை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போரட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதாவது- அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பெரிய கருணைபாளையத்தில் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து பெரிய கருணைபாளையம் முதல் அவிநாசி-மங்கலம் சாலை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஏற்கெனவே உள்ள தார் சாலையை அகற்றாமல் அதன்மேலேயே புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஒராண்டுக்கு மேலாகியும் பணி முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாக்த்திடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே உடனயாக சாலைப் பணியை முழுமையாக முடித்துத் தர உத்தரவாதம் அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.  

அவிநாசி-மங்கலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக அவிநாசி, மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. சம்பவயிடத்துக்கு வந்த போலீஸார், ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

DIGITAL ARREST மோசடியில் புதிய உச்சம்! 58 கோடியை இழந்த தம்பதி! | Digital Arrest

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT