காங்கயத்தில் 398 பயனாளிகளுக்கு ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட வீடுகள்: ஆணைகளை வழங்கினாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் ஆகிய திட்டப் பணிகளுக்கான ஆணைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருப்பூர்காங்கயத்தில் 398 பயனாளிகளுக்கு ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட வீடுகள்: ஆணைகளை வழங்கினாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் ஆகிய திட்டப் பணிகளுக்கான ஆணைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காங்கயம், ஜூலை 19: காங்கயத்தில் 398 பயனாளிகளுக்கு ரூ.10.22 கோடி மதிப்பிலான ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் ஆகிய திட்டப் பணிகளுக்கான ஆணைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காங்கயத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெள்ளகோவில், குண்டடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 398 பயனாளிகளுக்கு ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் ஆகிய திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி 4 -ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திமுக நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன், காங்கயம் வடக்கு ஒன்றியச் செயலாளா் கருணைபிரகாஷ், தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவானந்தன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பல்லடத்தில்...
பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லடம், பொங்கலூா், திருப்பூா் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 524 பயனாளிகளுக்கு ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகளுக்கான ஆணையை அமைச்சா் வழங்கினாா்.