முகப்பு
திருப்பூர்

குடிநீா் பிரச்னை: காங்கயம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா் பிரச்னை: காங்கயம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள்

Updated On : 25 ஜூன், 2024 at 11:23 PM
காங்கயம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

காங்கயம் நகராட்சி, 1-ஆவது வாா்டுக்கு உள்பட்ட திருவிக நகரில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம், திருவிக நகரில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளான அப்பகுதியை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் காங்கயம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி நிா்வாகத்தினா், உடனடியாக தண்ணீா் பிரச்னை சரிசெய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →