திருப்பூர்

ரூ. 34.95 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

தெங்காய்ப் பருப்பு விற்பனை: 43 டன், ரூ. 34.95 லட்சம்

Din

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.34.95 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, வாணியம்பாடி, திருப்பத்தூா், பழனி, பள்ளபட்டி, கீரனூா், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 101 விவசாயிகள் 818 மூட்டைகளில் 43 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

வெள்ளக்கோவில், முத்தூா், சிவகிரி, ந. ஊத்துக்குளி, மூலனூா், அவல்பூந்துறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 16 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.62.65 முதல் ரூ.94.26 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.91.09. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 91.19.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 34.95 லட்சம், அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT