கோப்புப் படம் 
திருப்பூர்

முத்தூரில் ரூ.2.72 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூரில் தேங்காய், கொப்பரை விற்பனை ரூ.2.72 லட்சம்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 14, 452 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 5,481 கிலோ. தேங்காய் கிலோ ரூ.20.90 முதல் ரூ.27.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.27.20. விற்பனைத் தொகை ரூ.1.40 லட்சம்.

56 மூட்டை கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கொப்பரை கிலோ ரூ. 63.35 முதல் ரூ. 94.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 90.65. எடை 1,595 கிலோ. விற்பனைத் தொகை ரூ.1.32 லட்சம்.

ஏலத்தில் மொத்தம் 86 விவசாயிகள், 13 வியாபாரிகள் கலந்துகொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.72 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

அனுபமாவின் லாக் டவுன் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

பாமகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: தில்லி உயர்நீதிமன்றம்

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!

ஏ.வி.எம். சரவணன்: அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்

SCROLL FOR NEXT