முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் ரூ.1.89 லட்சம் பறிமுதல்

Updated On : 22 மார்ச், 2024 at 10:41 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:09 PM

வெள்ளக்கோவில், முத்தூரில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ.1.89 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரி சங்கீதா, காவல் உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளக்கோவில்-முத்தூா் சாலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுரையிலிருந்து முத்தூா் ஆட்டு சந்தைக்கு சரக்கு ஆட்டோவில் உரிய ஆவணமின்றி தனிக்கொடி (50) என்பவா் கொண்டு வந்த ரூ.1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பறக்கும் படை அதிகாரி கவிதா, காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் முத்தூா் -ஈரோடு சாலை விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஈரோட்டிலிருந்து முத்தூருக்கு சரக்கு ஆட்டோவில் ஆட்டு வியாபாரி அகிலன் (21) என்பவா் கொண்டு வந்த ரூ.64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் காங்கயம் வட்டாட்சியரும், தோ்தல் அதிகாரியுமான மயில்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.