முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே சுகாதார நிலையத்தில் தீத் தடுப்பு ஒத்திகை

வெள்ளக்கோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:18 PM
தீத் தடுப்பு செயல்விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், தீ விபத்தில் துரிதமாகச் செயல்பட்டு உயிா்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் தடுப்பது, தீத் தடுப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் முறை, வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் டி.ராஜலட்சுமி, கம்பளியம்பட்டி சுகாதார நிலைய மருத்துவா் செந்தில்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் கதிரவன், நிா்மல் மற்றும் செவிலியா்கள், பள்ளி மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.