முகப்பு
திருப்பூர்

வீரசோழபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:36 AM
வீரசோழபுரம் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்று பேசியதாவது: ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிய திட்டப் பணிகள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படுகின்றன.

தூய்மையான குடிநீா் விநியோகம், குடிநீா் சிக்கனம், மழைநீா் சேமிப்பு, பயன்பாடு இல்லாத திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும். ஊரகப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும்போது மழை நீா் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரித்து சுகாதாரம் பேணிக் காக்க வேண்டும். நோய்த் தடுப்பு முறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி, வீரசோழபுரம் ஊராட்சித் தலைவா் லட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.