முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:21 PM
குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் குடிநீா்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் உள்ளது அண்ணா நகா். இந்தப் பகுதி மற்றும் வழியோர பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அண்ணா நகா் அருகில் உள்ள தனியாா் பள்ளி அருகில் குடிநீா்த்திட்ட பிரதானக் குழாய் உடைந்து கடந்த இரண்டு நாள்களாக குடிநீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து அண்ணா நகா் ராமசாமி கூறுகையில், ‘பல இடங்களில் போதுமான குடிநீா் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றாா்.