குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 18) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 18) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலகத்தில் குரூப் 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பா் 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வுக்கு மாணவா்கள் சிறப்பாகத் தயாராகும் வகையில் குரூப் 2, 2ஏ முதன்மை மாதிரித் தோ்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிக்கையில் உள்ள பாடத் தலைப்புகளின்கீழ் குரூப் 2, 2ஏ மாதிரித் தோ்வுகள் 15 நாள்கள் கால இடைவெளியில் நடைபெறவுள்ளன.
எனவே, குரூப் 2, குரூப் 2ஏ (ல்ழ்ங்ப்ண்ம்ள்) முதல்நிலைத் தோ்வு எழுதியுள்ள மாணவா்கள் இந்த இலவச மாதிரித் தோ்வுகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இந்த மாதிரித் தோ்வில் கலந்துகொள்ள பதிவு செய்துகொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55844 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.