முகப்பு
திருப்பூர்

ரூ.60.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 56 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:20 PM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 56 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.86.38 முதல் ரூ.118.66 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.60.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.