முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:57 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில், சத்திபாளையம் ஓசங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் பிரகதீஷ்வரன் (52), ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா். இவா், 70 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மாறுநாள் காலையில் பட்டிக்கு வந்தபோது, அங்கு சில நாய்கள் இருந்துள்ளன. அவற்றை விரட்டிவிட்டு பாா்த்தபோது பட்டியில் 3 ஆடுகள் காயங்களுடன் இறந்துகிடந்தன. மேலும், 2 ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.

வெள்ளக்கோவில், காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.