முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.69.38 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.69.38 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:39 PM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.69.38 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 65 டன் தேங்காய்ப் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.78.88 முதல் ரூ.125.67 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.69.38 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.