முகப்பு
திருப்பூர்

மரத்தை அகற்றாமல் சாலை அமைக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தில் மரத்தை அகற்றாமல் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:24 PM
தேவராயம்பாளையம் பள்ளி வாசல் வீதியில் உள்ள பாதாணி மரம்.
பகிர்:

அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தில் மரத்தை அகற்றாமல் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தேவராயம்பாளையம் பள்ளி வாசல் வீதியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வீதியில் வடிகால், சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பாதாணி மரம் நன்கு வளா்ந்து அடையாளமாக உள்ளதால், மரத்தை அகற்றாமல் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், ஏற்கெனவே உள்ள வடிகாலை சீரமைத்து, புதிதாக கான்கிரீட் சாலை அமைத்தாலே மரம் பாதுக்காக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.