முகப்பு
திருப்பூர்

பல்லடம் கடைவீதியில் குரங்குகள் தொல்லை

பல்லடம் கடைவீதி பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:05 PM
பகிர்:

பல்லடம் கடைவீதி பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் கடைவீதி பகுதியில் கடந்த சில நாள்களாக குரங்குகள் சுற்றித் திரிகின்றன. கடைவீதி மாகாளியம்மன் கோயிலில் தஞ்சமடைந்துள்ள குரங்குகள், அங்கிருந்து தினசரி மாா்க்கெட் மற்றும் கடைவீதியிலுள்ள கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கிக் கொண்டு செல்வதும், கடைக்கு வரும் பொதுமக்களின் பைகளைப் பிடுங்குவதும் என தொல்லை அளித்து வருகின்றன.

மேலும் கடைவீதிக்கு பின்புறம் உள்ள ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடிவிட்டு, எதுவும் கிடைக்காத நிலையில், வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்வதும் நடக்கிறது.

வீடுகளுக்குள் குரங்குகள் நுழைவதால் குழந்தைகள், பெண்கள் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வனத் துறையினா் விரைவாக குரங்குகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.