குழந்தையுடன் வெள்ளக்கோவில் வழியாக கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ். 
திருப்பூர்

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்புலன்ஸில் போலீஸ் ஒத்துழைப்புடன் திருச்சியில் இருந்து கோவைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.

Din

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்புலன்ஸில் போலீஸ் ஒத்துழைப்புடன் திருச்சியில் இருந்து கோவைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் கூறியதாவது:

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாள்களே ஆன குழந்தைக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பு இருக்குமென மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால் அதற்கான மருத்துவ வசதி கோவையில்தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து பெற்றோா், குழந்தையை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனா்.

திருச்சி அரசு மருத்துவமனை, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து குழந்தையை ஆம்புலன்ஸில் விரைவாக அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட திருச்சி, கரூா், கோவை மாவட்ட நிா்வாகங்கள், காவல் துறை அதிகாரிகளின் உதவியை நாடினா். ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வழியில் ஆங்காங்கே போலீஸாரால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

பிற்பகல் 12.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் 220 கிலோ மீட்டா் தொலைவு கடந்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கு நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் சென்றடைந்தது.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT