முகப்பு
திருப்பூர்

முத்தூா் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல்

முத்தூா் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:23 PM
பகிர்:

முத்தூா் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் குமாா் முத்தூா் பகுதியில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நத்தக்காடையூா் சாலை, புதுப்பாளையத்தில் மோகன்ராஜ் (48) என்பவரின் மளிகைக் கடையில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மோகன்ராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.