முகப்பு
திருப்பூர்

கோயில் நிலம் தனிநபா் பெயரில் பத்திரப்பதிவு: ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு

பல்லடம் அருகேயுள்ள சாலைப்புதூா் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி பல்லடம் சாா்பதிவாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:21 PM
கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி பல்லடம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள சாலைப்புதூா் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி பல்லடம் சாா்பதிவாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி சாலைப்புதூா் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சில தனிநபா்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், மேலும் தனிநபா் ஒருவருக்கு அந்த நிலத்தை பல்லடம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி பல்லடம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.