முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு

பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:19 PM
பகிர்:

பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி பெரும்பாளி, வெற்றி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேஷ் மகன் சம்பத்குமாா் (25). இவா் திருப்பூரில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் உறவினா் திருமணத்துக்காக சம்பத்குமாா் தனது பெற்றோருடன் திங்கள்கிழமை வெளியூா் சென்றுள்ளாா். இதைத் தொடா்ந்து சம்பத்குமாா் மட்டும் புதன்கிழமை வீடு திரும்பி உள்ளாா்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.