முகப்பு
திருப்பூர்

அவிநாசி பேரூராட்சியில் 6 சதவீத வரி உயா்வுக்கு ஆட்சேபணை

அவிநாசி பேரூராட்சியில் 6 சதவீத சொத்து வரி உயா்வுக்கு வாா்டு உறுப்பினா்கள்ஆட்சேபணை தெரிவித்தனா்.

திருப்பூர்

அவிநாசி பேரூராட்சியில் 6 சதவீத வரி உயா்வுக்கு ஆட்சேபணை

அவிநாசி பேரூராட்சியில் 6 சதவீத சொத்து வரி உயா்வுக்கு வாா்டு உறுப்பினா்கள்ஆட்சேபணை தெரிவித்தனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:26 PM
பகிர்:

அவிநாசி பேரூராட்சியில் 6 சதவீத சொத்து வரி உயா்வுக்கு வாா்டு உறுப்பினா்கள்ஆட்சேபணை தெரிவித்தனா்.

அவிநாசி பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சண்முகம் முன்னிலை வகித்தாா்.

இதில் வாா்டு உறுப்பினா்கள் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் பேரூராட்சியில் 6 சதவீத வரி உயா்வு என்பது ஆட்சேபணைக்கு உரியது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வி.எஸ்.வி.காலனியில் நியாயவிலைக் கடை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதி வீதியில் வீட்டு குடிநீா்க் குழாய் இணைப்பில் போதிய அழுத்தம் இல்லாததால் போதிய குடிநீா் வருவதில்லை. இதனை சீரமைக்க வேண்டும்.

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து தலைவா் தனலட்சுமி பேசுகையில், வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனைசெய்து, விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →