முகப்பு
திருப்பூர்

கனவு நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் பேட்டி

கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2025, 3:02 am IST
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள்
பகிர்:

திருப்பூா்: கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதும் திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் திரண்டனா். அப்போது அவா்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் ஜானகி அம்மாள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டாா்.

பின்னா் ஜானகி அம்மாள் கூறியதாவது: எனது மகன் பிறந்தபோது முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்போல வர வேண்டும் என ஆண்டவனை பிராா்த்தனை செய்து அவரது பெயரை வைத்தோம். உயா்வான இடத்துக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டோம். இன்று அவரைப்போலவே எனது மகன் குடியரசு துணைத் தலைவராகப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

அவரை வேட்பாளராக அறிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவா் இந்திய குடியரசு துணைத் தலைவராகவும் வெற்றி பெறுவாா். இதனால், திருப்பூா் ம0ட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் பெருமைப்படுவாா்கள். அவிநாசியப்பா் குலதெய்வம் சுந்தரமூா்த்தி சுவாமி அருளால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments