தாராபுரம் பகுதியில் புதிய திட்டப் பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா். 
திருப்பூர்

தாராபுரத்தில் ரூ.3 கோடியில் புதிய திட்டப் பணிகள்

Syndication

தாராபுரம் ஒன்றியப் பகுதியில் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட கரையூா் காளியம்மன் கோயில் வளாகத்தில் பொது நிதியின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி, வீராச்சிமங்கலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் டி.குமாரபாளையத்தில் நூலகக் கட்டடம் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகக் கட்டடம், கரையூரில் அயோத்திதாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூட கட்டடங்கள் உள்பட ரூ.3.06 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மேலும் முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், கொளத்துப்பாளையம் பேரூராட்சித் தலைவா் சுதா கருப்புசாமி, தாராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வெண்ணிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT