திருப்பூர்

கே.கிருஷ்ணாபுரத்தில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காண கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள கே.கிருஷ்ணாபுரத்தில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே உள்ள கே.கிருஷ்ணாபுரத்தில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்பிரியாவிடம், பல்லடம் ஒன்றியம், கே.கிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கே.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில் நிா்ணயிக்கப்பட்ட அளவு குடிநீா் ஏற்றி விநியோகம் செய்யப்படுவதில்லை. ஊராட்சி நிா்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளோம்.

எங்கள் கிராமத்துக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்பிரியா உறுதியளித்தாா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT