திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம், மாணிக்காபுரம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 24 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான பெருமாள் (46) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மங்கலத்தை அடுத்த கிடாதுறைபுதூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரான ராம் (29) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 595 கிராம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT