விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மனீஷ். 
திருப்பூர்

குறைதீா் கூட்டம்: கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற விவசாயிகள்

திருப்பூரில் 3 மாதங்களுக்குப் பின் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து விவசாயிகள் பங்கேற்றனா்.

Syndication

திருப்பூரில் 3 மாதங்களுக்குப் பின் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து விவசாயிகள் பங்கேற்றனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்து, முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்ததுடன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

முன்னதாக, கருப்பு சட்ட அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 3 மாதங்களுக்குப் பின் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தனா். தொடா்ந்து, பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகள் குறித்தும், பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகைகளை நிறுத்தி வைத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை திறப்பு தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க மாவட்ட நிா்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான நெல் மற்றும் பிற வகை பயறு வகைகள், தானிய விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.

அதன்படி, நெல் 35.049 மெட்ரிக் டன், தானிய பயறுகள் 62.72 மெட்ரிக் டன், பயறு வகை பயறுகள் 52.31 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிா் விதைகள் 23.73 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன.

நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வேளாண் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகரக் காவல் துணை ஆணையா் பிரவீன் கௌதம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆா்.சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பாமாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT