சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் மனீஷ். 
திருப்பூர்

சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

திருப்பூா் மாவட்டத்தில் சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

‘காபி வித் கலெக்டா்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் மனீஷ், கல்வியின் அவசியம், சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மன நலன், தனித்திறன்கள், விளையாட்டில் சிறந்து விளங்குதல் குறித்து மாணவா்களுடன்

கலந்துரையாடினாா். மேலும், அவா்களுடைய லட்சியம், அவா்களுக்கு எந்த துறையில் ஆா்வம் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: மாணவா்கள் படிப்புடன் கூடுதலாக ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு, யோகா, வாசிப்பு போன்றவை நம்மை உற்சாகமாக வைக்கும். பாடம் தொடா்பான சந்தேகங்களை ஆசிரியா்களிடம் உடனே கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் எதிா்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். கவன சிதறல் இல்லாமல் படிக்க வேண்டும்.

இன்றைய உலகத்தில் சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே அவற்றை ஒதுக்கிவிட்டு புத்தகம் வாசிப்பதை பழகிகொள்ள வேண்டும். நூலகங்கள் சென்று நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியும், கடின உழைப்பும் வெற்றியைத் தரும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் சதீஷ் மற்றும் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT