ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி. 
திருப்பூர்

ஜனவரி 1-முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: கோழிப் பண்ணை விவசாயிகள் அறிவிப்பு

பல்லடத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட கோழிப் பண்ணை விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

Syndication

பல்லடத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட கோழிப் பண்ணை விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா். கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம், திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரமேஷ், கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இதில், கறிக்கோழி பண்ணையாளா்களின் கூலி உயா்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 1-ஆம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்து என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயிலில் டிச.30-இல் பரமபத வாசல் திறப்பு

அகா்பத்திகள் தயாரிக்க புதிய தர நிா்ணயம்: நுகா்வோா் நலனைக் காக்க அரசு நடவடிக்கை

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது நீதிமன்றம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள்!

SCROLL FOR NEXT