திருப்பூர்

லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைதுசெய்யப்பட்டாா்.

மூலனூா் சாலையில் சனிக்கிழமை இரவு வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகில் மூன்று எண் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் குமாா் (47) என்பவரை கைது செய்தாா்.

விசாரணையில், வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT