இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
திருப்பூர்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சாலை மறியல்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் அருகே, அலங்கியம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் அருகே, அலங்கியம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அலங்கியம் பகுதியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, 3 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து அருகில் உள்ள பகுதி மக்களுக்கு இலவச பட்டா வழங்கிய நிலையில், தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இம்மக்கள் வேதனை தெரிவித்தனா்.

இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம்-பழனி சாலை, அலங்கியம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் துணை வட்டாட்சியா் செந்தில் பிரபு மற்றும் அலங்கியம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அலங்கியம் பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT