பால்வினை தொற்று நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா். 
திருப்பூர்

பால்வினை தொற்று நோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணி

காங்கயம் அருகே, படியூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

காங்கயம் அருகே, படியூரில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

படியூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காங்கயம் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் டாக்டா் சரண்யா பேரணியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

படியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி, பேருந்து நிறுத்தம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக

சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் பால்வினை தொற்று குறித்து விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை லிங்கேஸ்வரி, மூத்த காசநோய் மேற்பாா்வையாளா் ஜெகதீஷ், மாவட்ட தலைமை மருத்துவமனை சுகவாழ்வு மைய ஆலோசகா் கருப்புசாமி மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முதல்வா் ஸ்டாலினுடன் தனியரசு சந்திப்பு

ஓஆா்எஸ் பெயரிலான பானங்களுக்குத் தடை: சோதனையில் 1.47 லட்சம் கிலோ பறிமுதல்

கபாலீசுவரா் கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்துக்கு விரைவில் பொன்விழா - மன்ற உறுப்பினா் செயலா் விஜயா தாயன்பன்

டெட் தோ்வுக்கு நாளை முழு மாதிரித் தோ்வு

SCROLL FOR NEXT