திருப்பூர்

கஞ்சா விற்ற கல்லூரி மாணவா் கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகமது இசாக் புதுப்பை பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரித்துள்ளாா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் சோதனை மேற்கொண்டபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் புதுப்பை பகுதியைச் சோ்ந்த அன்பு (22) என்பதும், கல்லூரி மாணவரான இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அன்புவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 25 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தத்தால் பெரும் இழப்பு - அரசு தீா்வு காண கோரிக்கை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

போட்ஸ்வானா அதிபருடன் குடியரசுத் தலைவா் சந்திப்பு: கல்வி, வேளாண்மையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு

தோட்டா தரணிக்கு செவாலியே விருது: முதல்வா் வாழ்த்து

கால்நடைத் துறை பெண் மருத்துவா் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து

SCROLL FOR NEXT