ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா். 
திருப்பூர்

திருமூா்த்தி அணையில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம்

Syndication

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்தி அணைப் பகுதியில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே திருமூா்த்தி மலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரா் கோயில், பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூா்த்தி அணை போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திருமூா்த்தி அணைப் பகுதியில் செயல்படுத்தப்பட்ட படகு இல்லம், கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில், படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில், திருமூா்த்தி அணை உதவி செயற்பொறியாளா் ஆதி சிவன், தளி பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவா, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு ஆா்வலா்கள் எஸ்எம்.நாகராஜ், பூபதி, சத்யம் பாபு, பிரசாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT