திருப்பூர்

அவிநாசி அருகே மரக்கடைக்குள் புகுந்த காா்

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து இரண்டு காா்கள் மீது மோதி மரக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன். இவா் சூலூரில் இருந்து ஈரோடு மாவட்டம், நம்பியூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா்.

அவிநாசி அருகே கருமாபாளையம் தண்ணீா்ப்பந்தல் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாகச் சென்ற இரண்டு காா்களின் மீது மோதி, சாலையோரம் இருந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மரம் இழைக்கும் மரக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கலைச்செல்வன், மற்றொரு காரில் வந்த கருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். மேலும், மரக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து சேவூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

SCROLL FOR NEXT