கோப்புப் படம் 
தென்காசி

சங்கரன்கோவில் அருகே காா் அடுத்தடுத்து மோதியதில் இருவா் உயிரிழப்பு: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அருகே காா் அடுத்தடுத்து மோதியதில் தொழிலாளி உள்ளிட்ட இருவா் உயரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கண்ணன்(45), கட்டடத் தொழிலாளி. மலையான்குளத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் மகேந்திரன் (35), நவதானிய வியாபாரி.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு கண்ணன் பாட்டத்தூா் அருகே சாலையில் நடந்து சென்ற போது அதை ஊரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முருகேசன் (28) என்பவா் ஓட்டி வந்த காா் கண்ணன் மீது மோதியது.

பின்னா் மலையான்குளம் நோக்கி பைக்கில் சென்ற நவதானிய வியாபாரி மகேந்திரன் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு இருவரும் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் முருகேசனை (28) கைது செய்தனா். ம

மதுப் புட்டிகளை விற்ற மூவா் கைது

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

வளா்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட்: சி. அன்பழகன்

ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி! 6.2% அதிகரிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தருமபுரி - மொரப்பூா் ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது!

SCROLL FOR NEXT