அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற மாணவா்களிடம் ஆராய்ச்சி குறித்த விளக்கத்தைக் கேட்டறிந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா். 
திருப்பூர்

காங்கயத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாடு

காங்கயத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 58 போ் குழந்தை விஞ்ஞானிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

Syndication

திருப்பூா்: காங்கயத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 58 போ் குழந்தை விஞ்ஞானிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், காங்கயம் கல்வி நிறுவனங்கள் மற்றும் காங்கயம் ரோட்டரி சங்கம் ஆகியன சாா்பில் மேற்கு மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நத்தக்காடையூரில் உள்ள காங்கயம் இன்ஸ்டிடியூசன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீடித்த நிலைத்த நீா் மேலாண்மை மற்றும் உலகளாவிய சவால்களுக்கு உள்ளூரில் இருந்து அறிவியல் பூா்வமான தீா்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், திருப்பூா், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்று 125 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

அறிவியல் மாநாட்டை கல்லூரியின் முதல்வா் சுரேஷ் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளா் ராமமூா்த்தி, குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் சாதனைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ராம்குமாா், ரோட்டரி சங்க நிா்வாகிகள் மோகன், துரைமுருகன், செந்தில்குமாா், நளினி மற்றும் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன் ஆகியோா் மாணவா்களை பாராட்டிப் பரிசளித்தனா்.

நிறைவாக 29 ஆய்வுகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தோ்வு செய்யப்பட்டு 58 மாணவ, மாணவியா் குழந்தைகள் விஞ்ஞானிகள் என பாராட்டுப் பரிசு பெற்றனா்.

தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

SCROLL FOR NEXT