திருப்பூர்

திருப்பூரில் நாளை நெடுந்தூர ஓட்டப் போட்டி

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூா் மாவட்டப் பிரிவின் சாா்பில், அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி வரும் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இப்போட்டி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலை 6 மணிக்கு தொடங்கி வஞ்சிபாளையம் சென்று மீண்டும் சிக்கண்ணா கல்லுரியில் முடிவடைய உள்ளது.

இப்போட்டிகளில் 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ தொலைவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ தொலைவும் ஆகும்.

போட்டிகளில் கலந்து கொள்வோா் கண்டிப்பாக வயது சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிப்பவராக இருந்தால் படிப்பதற்கான சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கான பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். எனவே, போட்டியில் கலந்து கொள்பவா்கள் அவா்களது வங்கிக் கணக்கின் நகலை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே வருவதோடு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது பெயா், வயது சான்றிதழ், மருத்துவரின் தகுதி சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவ முன்னெச்சரிக்கை மற்றும் அறிவிப்பு படிவத்தில் எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமா்ப்பித்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000, 2-ஆம் பரிசாக தலா ரூ.3,000, 3-ஆம் பரிசாக தலா ரூ.2,000 வழங்கப்படும். 4-ஆம் இடத்திலிருந்து முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ.1000 வீதம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 0421-2244899 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்திய பாபர் அசாம்! டி20-ல் அதிக ரன்கள்!

SCROLL FOR NEXT