பிரசாரம்  மேற்கொண்ட  எடப்பாடி  கே. பழனிசாமி. 
திருப்பூர்

எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூரில் செப்.12-ல் தொழில் துறையினருடன் சந்திப்பு!

திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.

Syndication

திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.

இது குறித்து, அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பா் 11-ஆம் தேதி வருகிறாா்.

இதன்படி காங்கயம் தொகுதியில் செப்டம்பா் 11-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். அன்று இரவு திருப்பூா், அனுப்பா்பாளையத்திலிருந்து 15 வேலம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா்.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அங்கு அனைத்து தொழில் அமைப்பினா் மற்றும் வா்த்தகா்களை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூா் வடக்கு தொகுதியில், பி.என்.சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் தெற்கு தொகுதியில், மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா்.

குடிமனைப்பட்டா கோரி டிச.16-இல் மனு அளிக்கும் போராட்டம் மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகள் தா்னா போராட்டம்

சென்னை சா்வதேச பட விழா: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அமெரிக்கன் கல்லூரியில் பயிலரங்கு

181-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சி

SCROLL FOR NEXT