முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஏப்ரல் 2026, 1:30 am IST
காங்கயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
பகிர்:

காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக கோவை புறநகா் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து, முன்னாள் எம்எல்ஏவும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான என்.எஸ்.என்.நடராஜை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், காங்கயம் நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்று உரையாற்றினா். இந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement