முகப்பு
திருப்பூர்

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 6:43 PM
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரான பின், அதிமுக ஆட்சியல் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

பல்லடத்தில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.பரமசிவம் பங்கேற்று, பணிமனையைத் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பின் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். பல்லடம் தொகுதியில் கே.பி.பரமசிவம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்.

Advertisement

அதிமுக ஆட்சியல் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சி நிறுத்தியுள்ளது. முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின் அந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா். பல்லடம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments