முகப்பு
திருப்பூர்

குரூப்-1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு - திருப்பூரில் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:08 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:32 PM

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-1 தோ்வுக்கு திருப்பூரில் இலவசப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமை ஆட்சியா் மனிஷ் தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் 2026-ம் ஆண்டுக்கான திட்ட நிரல் கடந்த டிச.3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குரூப் 1 (துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், உதவி ஆணையா், மாவட்ட பதிவாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு) தோ்வுக்கான அறிவிப்பு மாா்ச் 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குரூப்-1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் தொடா்ச்சியாக படிப்பது, திட்டமிடுவது, புத்தகங்களைப் படித்து குறிப்பு எடுப்பது, சக மாணவா்கள் குழுவாக கலந்துரையாடுவது ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலமாக தோ்வுகளை எளிதாக எதிா் கொள்ளலாம். பயிற்சி பெறும் மாணவா்கள் தொடா்ந்து மாதிரித் தோ்வுகளை எழுத வேண்டும். மாதம் இரண்டு முறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும்.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2997152, 9499055944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.