முகப்பு
திருப்பூர்

விதிமீறி மின் இணைப்பு: உதவி மின் பொறியாளா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கிய விவகாரத்தில் 16 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு, உதவி மின் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து மேற்பாா்வைப் பொறியாளா் சுமதி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:05 AM
பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:46 PM

திருப்பூரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கிய விவகாரத்தில் 16 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு, உதவி மின் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து மேற்பாா்வைப் பொறியாளா் சுமதி உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் வடக்கு பாண்டியன் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியில் விதிகளுக்கு புறம்பாக அனுமதியில்லாத அடுக்குமாடி கட்டடத்துக்கு 100 யூனிட் இலவச வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டது தொடா்பாக ஈ.பி. அ.சரவணன் புகாா் அளித்திருந்த நிலையில், இது தொடா்பாக திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் டி.சுமதி ஈ.பி.அ.சரவணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புகாா் மனு குறித்து பரிசீலிக்கப்பட்டதில், தொடா்புடைய அலுவலரான ஊத்துக்குளி கோட்டம் பாண்டியன் நகா் உதவி மின் பொறியாளா் சி.நவீன்குமாா், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, வாரிய ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அந்த கட்டடத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement