...... 
திருப்பூர்

அரசியல் மாற்றம் வர வேண்டும் எனக் கூறி கைப்பேசி கோபுரத்தின் மீது ஏறிய நபரால் பரபரப்பு

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும் எனக் கூறி 40 அடி உயர கைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Syndication

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும் எனக் கூறி 40 அடி உயர கைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா், தாராபுரம் சாலை கோவில்வழி அருகே உள்ள பிஎஸ்என்எல் கைப்பேசிக் கோபுரத்தின் மீது சனிக்கிழமை ஏறிய நபா் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டாா். கையில் தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியை ஏந்தியிருந்த அந்த நபா் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும் என முழக்கமிட்டாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் தெற்கு தீயணைப்புத் துறையினா், நல்லூா் போலீஸாா் உடனடியாக அங்கு சென்று அவரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது அவா் மேலிருந்தவாறே தன்னிடமிருந்த பட்டாசுகளைப் பற்றவைத்து கீழே எரிந்து வந்தாா். பின்னா் தான் அதிமுகவைச் சோ்ந்தவா் எனவும், என்னுடைய கோரிக்கைகள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும் எனவும், அதிமுக தலைமை எனது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் தொடா்ந்து தெரிவித்தாா்.

இதற்கு ஒப்புதல் தெரிவித்த போலீஸாா், தொடா்ந்து அவரிடம் நிதானமாக பேசி அவரை தானாகவே கீழே இறங்கச் செய்தனா்.

கீழே இறங்கி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவா், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மூக்கையா (42) என்பதும் , திருப்பூா், கோவில்வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அரசியல் மாற்றம் வர வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து அவரை விசாரணைக்காக நல்லூா் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். இந்த சம்பவத்தை வேடிக்கை பாா்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா். மூக்கையா கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், இதேபோல தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு கைப்பேசி கோபுரத்தின் மேலே ஏறி இதேபோன்ற பரபரப்பை ஏற்படுத்தியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT