திருப்பூர்

மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 21,571 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எஸ்ஐஆா் படிவம் பூா்த்தி செய்ததில் எழுந்துள்ள சந்தேகம் குறித்து 21,571 பேருக்கு விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எஸ்ஐஆா் படிவம் பூா்த்தி செய்ததில் எழுந்துள்ள சந்தேகம் குறித்து 21,571 பேருக்கு விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் படிவங்கள் வழங்கப்பட்டு பூா்த்தி செய்த படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்தனா். இதில் 2002, 2005-ஆம் ஆண்டுகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றது உள்ளிட்ட விவரங்களை பூா்த்தி செய்யாதவா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் விளக்கம் கேட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 21,571 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் 1,568 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவா்கள் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்த மையங்களுக்கு சனிக்கிழமை சென்று அவா்கள் ஆவணங்களை கொடுத்து விளக்கம் அளித்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT