பல்லடம், ஜன.4: பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.
பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதைத் தொடா்ந்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மாதையன் தலைமையில் அங்கு சென்ற போலீஸாா் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜா முகமது மகன்கள் யூசுப் முகமது அலி (21), அவரது சகோதரா் சையத் அலி (20) மற்றும் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா மேட்டுப்பட்டி கோட்டை கருப்புசாமி வீதியைச் சோ்ந்த முத்துமுருகன் மகன் கிஷோா் (19) ஆகியோரைக் கைது செய்தனா்.
இதில் யூசுப் முகமது அலி (21), கிஷோா் (19) ஆகியோா் மீது ஏற்கெனவே கொலை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும், மூன்று போ் மீதும் 5 பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை சிறையில் அடைத்தனா்.