திருப்பூர்

நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழப்பு

Syndication

அவிநாசி அருகே நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.

அவிநாசி அருகேயுள்ள வேட்டுவபாளையம் ஊராட்சி, வேலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ். விவசாயியான இவா், கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு புதன்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை மாடுகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, சிவராஜ் சென்று பாா்த்தபோது கொட்டகைக்குள் தெருநாய்கள் புகுந்தது தெரியவந்தது.

நாய்களை விரட்டிவிட்டு அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினா் கூறாய்வு செய்து அப்பகுதியிலேயே கன்றுக்குட்டியின் உடலை புதைத்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையால் அவதியடைந்து வருகிறோம்.

எங்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளை தெருநாய்கள் கடித்து கொல்வதால் பொருளாதார ரீதியாக தவித்து வருகிறோம்.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT